Our Feeds


Tuesday, February 17, 2026

Zameera

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்


நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவென்பது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்கு அருகாமையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்

சட்டத்தரணியும் அவரது மனைவியுமே சம்பவத்தில் உயிரிழந்தனர்.

சட்டத்தரணிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடிமகனின் பாதுகாப்புக்கு என்ன நடக்கும்.

சட்டத்தை உரிய வகையில் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதேநேரம், பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரே தினத்தில் இரண்டு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகின.

கடந்த வருடம் 111 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகின.

ஆரசாங்கத்தின் அசமந்த போக்கு காரணமாகவே இந்த சம்பவங்கள் அதிகளவில் பதிவாவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »