Our Feeds


Friday, February 6, 2026

Zameera

T20 உலகக் கிண்ணம்: கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்


வரவிருக்கும் இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகக் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. 


அதன்படி, நாளை (7) முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை போட்டி நடைபெறும் காலப்பகுதியில், மாளிகாவத்தை ஆர். பிரேமதாச விளையாட்டரங்கம் மற்றும் கறுவாத்தோட்டம் SSC விளையாட்டரங்கம் ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் இந்தப் போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும். 


இக்காலப்பகுதியில் குறித்த மைதானங்களில் நடைபெறும் போட்டிகளைக் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் பெருந்திரளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அப்போட்டிகள் நடைபெறும் நாட்களுக்கு ஏற்றவாறு இதனை நடைமுறைப்படுத்தக் கொழும்பு போக்குவரத்துப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »