பழைய கையிருப்புக்களுக்கு இவ்வாறு எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் நுகர்வோருக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளன.
ஒரு பீப்பாய் எண்ணெய் 70 அமெரிக்க டொலராக அமைந்து காணப்படும் போது இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் கையிருப்புகளுக்கு மத்திய கிழக்கு போர்ச் சூழல் நிலைமையை பயன்படுத்தி விலை சூத்திரத்தை மாற்றி, அதிக விலை அறவிடுவது மிகவும் ஊழல் நிறைந்த செயலாகும்.
எரிபொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கின்றன என்று காரணம் காட்டி அதிகரிக்கப்பட்ட விலை மூலம் அரசாங்கம் நாட்டிற்கு பொய் சொல்லியுள்ளது.
அதிகரித்த எண்ணெய் விலை சில மணி நேரங்களிலேயே மீண்டும் வீழ்ச்சி அடைந்து கொண்டிருப்பதாகவும், ஒரு பீப்பாய் எண்ணெய் விலை இருந்ததை விட மேலும் குறைந்து கொண்டிருப்பதால் இந்த விலை அதிகரிப்பை நியாயப்படுத்த முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
