கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (31) சோஹாரா
புகாரியினால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமுக்கும் அதன் செயலாளர் நிசாம் காரியப்பருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதைத் தடுக்க கோரிய இடைக்கால மனு நிராகரிக்கப்பட்டது.ஏற்கனவே சோஹாரா புகாரி மாநகர சபை உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருப்பதாக, தெரிவு அத்தாட்சி உத்தியோகத்தர் கெசட் அறிவித்தல் மூலம் வெளியிட்டிருந்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக, முஸ்லிம் காங்கிரஸ் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினரான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
