Our Feeds


Thursday, March 19, 2026

Zameera

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்!


 ( இணையத்தள செய்திப் பிரிவு )
நாட்டிற்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் (Sergio Gor) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை முற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.


மேலும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் நிலைப்பாடு மற்றும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோருடன் செர்ஜியோ கோர் (Sergio Gor) வுடன் வருகை தந்துள்ள தூதுக்குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »