அமெரிக்காவின் உச்ச பாதுகாப்பு விமானத்தை அழித்தது ஈரான்
சௌதி தலைநகர் ரியாத்திற்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் இருந்த அமெரிக்காவின் பறக்கும் கண் என்று அழைக்கப்படும் ஈ-3 (E-3) சென்ட்ரி (E-3 Sentry) விமானம் இரானிய தாக்குதலில் இரண்டாகப் பிளந்து காணப்படுகிறது.
சௌதி தலைநகர் ரியாத்திற்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதை BBC உள்ளிட்ட மேற்கு ஊடகங்களே உறுதிப்படுத்தியுள்ள நிலையில்
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளை மையம் இதுவரை பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.
அமெரிக்க விமானப்படையின் "நடமாடும் கட்டுப்பாட்டு மையம்" என்று அழைக்கப்படும் இந்த விமானம் நவீன வான்வெளிப் போர்களில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகும்.
போயிங் 707 ரக விமானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இதன் தனிச்சிறப்பு, அதன் மேல் அமைந்துள்ள 30 அடி அகலமுள்ள சுழலும் ரேடார் (Rotodome) ஆகும்.
இது 400 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள எதிரி விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைத் துல்லியமாகக் கண்டறிந்து, அமெரிக்க படைவீரர்களுக்கு வழிகாட்டும் "வான்வழிக்கண்" (Eye in the Sky) ஆகச் செயல்படுகிறது.
சுமார் $500 மில்லியன் மதிப்பிலான இந்த விமானம், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான இலக்குகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டது.
அமெரிக்காவின், இந்த விமானம் கடுமையாகச் சேதமடைந்துள்ளமை சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
