Our Feeds


Monday, March 30, 2026

Zameera

குவைட்டில் ஏவுகணை தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு


 இஸ்ரேல், அமெரிக்கா - ஈரானுக்கு இடையிலான போர் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் தாக்குதலின் ஒரு பகுதியாக குவைட்டில் உள்ள மின்சார மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டிடம் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குவைட் நாட்டின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இன்று (30) வெளியிட்ட அறிக்கையில் இத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து தொழில்நுட்பம் மற்றும் அவசரகால குழுக்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக செயற்பட்டு நிலையத்தை மீண்டும் செயல்பட வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் எரிசக்தி அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »