Our Feeds


Wednesday, March 18, 2026

Zameera

முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவதற்குத் தடை


 இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இயக்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. 


இது தொடர்பாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. 


கடந்த காலங்களில், உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் சட்டவிரோதமான முறையில் ட்ரோன்களை இயக்கிய நபர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமையை விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது. 


எனவே, இலங்கையில் ட்ரோன்களை இயக்குபவர்கள், தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கி, முறையான அனுமதியைப் பெற்ற பின்னரே ட்ரோன்களைப் இயக்க வேண்டும் என்று இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. 


தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும், ட்ரோன் இயக்குபவர்கள் தேவையற்ற சட்டச் சிக்கல்கள் மற்றும் சிரமங்களுக்கு உள்ளாவதைத் தவிர்ப்பதையுமே இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் நோக்கம் என இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »