Our Feeds


Thursday, April 9, 2026

Zameera

பொரளை பொலிஸில் வைக்கப்பட்டிருந்த வழக்கு பொருட்களில் 500 ரூபாய் பணத்தை திருடிய குற்றத்தில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பொலிஸாரால் கைது


 பொரளை பொலிஸில் வைக்கப்பட்டிருந்த வழக்கு பொருட்களில் 500 ரூபாய் பணத்தை திருடியமை தொடர்பில் ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.



2023 ஆம் ஆண்டு பொரளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு பொருட்கள் தொடர்பான தணிக்கை அறிக்கையின்படி, வழக்கு பொருட்கள் அறையிலிருந்த 57 பொருட்கள் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரான ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகர், 51 நாட்களுக்கு முன்னர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



இந்தக் குற்றம் தொடர்பில் இதற்கு முன்னர் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் பொரளை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் மூன்று பொலிஸ் சார்ஜன்ட்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.



Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »