Our Feeds


Wednesday, April 8, 2026

Zameera

புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையம் திறப்பு

புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் இன்று (08) காலை 10.00 மணி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையின் பங்களிப்புடன் இந்த நவீன மயமாக்கல் செயன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இத் திட்டத்துக்கு ரூபா 424 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மேம்படுத்தப்பட்ட வசதிகளில் தரைத்தளம் பேருந்து நிறுத்துமிடமாகவும் இரண்டாம் தளம் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான ஓய்விடங்களாகவும் மூன்றாம் தளம் நிர்வாக மற்றும் செயல்பாட்டுச் சேவைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »