(இணையத்தள செய்திப் பிரிவு)
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் தொடர்புடையதாக கூறப்படும் “கரந்தெனிய சுத்தா” என அழைக்கப்படும் நபரின் சகோதரர் ராஜு இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தகவலின்படி, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கியிருந்த ராஜு மீது கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவரை அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ராஜு மீது பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சந்தேகங்கள் நிலவுவதாகவும், அவர் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
