Our Feeds


Thursday, April 16, 2026

Zameera

களனி ஆற்றில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு


கித்துல்கல, நெலிகம பகுதியில் உள்ள களனி ஆற்றில் நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) உறவினர்களுடன் சுற்றுலா சென்றிருந்தபோதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கித்துல்கல பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில், ஆற்றின் ஆழமான குழியொன்றில் சிக்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »