வாஷிங்டன்,
அமெரிக்காவின் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி
எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், தொழில் அதிபர் பில் கேட்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.இத்தகைய எப்ஸ்டீன் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மனைவி மெலனியா தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதை மெலனியா திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
“எப்ஸ்டீனுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இந்த கதைகள் முற்றிலும் பொய்யானவை. எப்ஸ்டீனுடன் என்னை தொடர்புபடுத்தி ஆதாரமற்ற கதைகளை உருவாக்குகிறார்கள். அவரை நான் 2 முறை மட்டுமே சந்தித்து உள்ளேன். ஆனால் தனிப்பட்ட முறையில் எப்ஸ்டீனை எனக்கு தெரியாது.
எப்ஸ்டீன் தான் என்னை டிரம்பிற்கு அறிமுகப்படுத்தினார் என்ற தகவல் முற்றிலும் தவறானது. நானும், டிரம்பும் ஒரு கிளப்பில் தான் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டோம். அதில் எப்ஸ்டீனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆனால் அதற்காக என்னை இதில் இழுப்பது நியாயமற்றது. எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இந்த தீய்தரமான முயற்சிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மெலனியா கூறினார்.
அமெரிக்காடிரம்ப்
