Our Feeds


Saturday, April 11, 2026

ShortNews

வீதி விதிமீறல்களை முறைப்பாடு அளிக்க புதிய 'WhatsApp' இலக்கம் அறிமுகம்!

 


அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில்

வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை சமர்ப்பிப்பதற்காக, பொலிஸ் தலைமையகம் புதிய 'WhatsApp' இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 


இதற்கமைய, 070-4755600 என்ற இலக்கத்தின் ஊடாக வீடியோக்களை அனுப்பி வைக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், இந்த இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


குறித்த வீடியோக்களை அனுப்பும் போது, அது இடம்பெற்ற திகதி, இடம் மற்றும் பொலிஸ் பிரிவு ஆகிய விபரங்களைக் குறிப்பிட்டு அனுப்புமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »