Our Feeds


Monday, May 25, 2026

Zameera

நாட்டை பொறுப்பேற்கத் தயாராக உள்ளேன் – திலித் ஜயவீர


 இப்பொழுதேனும் நாட்டினைப் பொறுப்பேற்கத் தான் தயாராக இருப்பதாகவும், நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தேவையான வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாகவும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் நடத்திய விசேட சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘Sri Lanka – Mingle with Dilith’ (இலங்கை மீதான அக்கறை - திலித்துடனான கலந்துரையாடல்) எனும் இந்த விசேட சந்திப்பு, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள Acacia Campus Theatre மண்டபத்தில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதோ திலித் ஜயவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்:

கேள்வி: ஜனாதிபதியாகும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்தால், இரண்டாயிரத்து இருபத்தொன்பது (2029) வரை காத்திருக்காமல் உங்களுக்கு ஜனாதிபதி பதவி தற்போது வழங்கப்பட்டால்... இந்த நாட்களில் நிலவும் பொருளாதார நெருக்கடியை நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள்?

பதில் : "வேலைத்திட்டம் இல்லாமல் பணியைப் பொறுப்பேற்கக் கூடாது. ஆனால், இப்போது நமக்கு (வாய்ப்பு) வழங்கப்பட்டால் இப்போதே செய்வோம். இன்று தந்தால் இன்றே செய்து காட்டுவோம். எந்தவொரு சிக்கலான பிரச்சினையினதும் ஆரம்பப் புள்ளிக்குச் சென்றால் அது மிகவும் எளிமையானது.

இப்போது இருக்கும் பிரச்சினை, டொலரின் மீது ஏற்படும் அழுத்தமே முதன்மையானது. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் முதலாவது விடயம். தற்போது நமது பொருளாதாரத்திற்கு வரும் அழுத்தம் இதுதான்.

இதனை மேலாண்மை செய்ய வேண்டுமாயின், முதலாவதாக செய்ய வேண்டியது என்னவென்றால், இந்தத் தருணத்தில் மக்களுடன் ஒரு உண்மையான, நேர்மையான, நம்பிக்கையான உரையாடலை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில், இன்று இல்லாமல் போயிருப்பது இந்த நாட்டின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கையே தவிர டொலர் அல்ல. 

கட்டியெழுப்பப்பட வேண்டிய இந்த நம்பிக்கையை, சில மணித்தியாலங்களுக்குள் உண்மைகளைப் பேசி, மக்களுடன் ஒரு கலந்துரையாடலுக்குச் செல்வதன் மூலம் கட்டியெழுப்ப முடியும். 

அவ்வாறின்றி, மீண்டும் பெருமை பேசிக்கொண்டும், டொலர் இல்லாமல் போனதற்குக் காரணம் வேறு யாரோ ஒருவர் என்று கூறிக்கொண்டும் இருந்தால், இதனை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது.

அது முதலாவது விடயம். அடுத்தது, கடன் வழங்குநர்களுக்குத் தேவையான முறையில் ஒரு வியாபாரத்தை நடத்தினால், அதாவது வங்கிக்குத் தேவையான முறையில் நாம் வியாபாரத்தைச் செய்வது போலாகும். 

நாம் ஒன்றைப்புரிந்துகொள்ள வேண்டும், கடன் வழங்குநர்கள் நம்மை விடவும் அனாதரவான நிலையில் இருக்கிறார்கள் (நம்மிடம் இருந்து கடனைத் திரும்பப் பெறுவதில்). இந்த ஒரு விடயத்தைத்தான் நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம்.

நான் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) எதிரானவன் அல்ல. ஆனால் நான் கூறுவது என்னவென்றால், சர்வதேச நாணய நிதியம் கொண்டு செல்லும் இந்த வேலைத்திட்டத்தினால்தான் நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 

அதனை (சரியான முறையில்) கையாள்வதற்கோ, பேசித் தீர்ப்பதற்கோ தேவையான பலம், ஆளுமை மற்றும் அறிவு இல்லாமையே இன்றைய நெருக்கடிக்கு மிகப்பெரிய காரணமாகும்."


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »