தேசிய மக்கள் சக்தியின் (NPP) எந்தவொரு அமைச்சரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது தலைவரோ ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும், எதிர்காலத்திலும் இத்தகைய ஊழல் மோசடிகளுக்கு எவ்வித இடமும் அளிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் சுசில் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.
தம்புள்ளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்:
அரசின் பிரதிநிதிகள் என்ற வகையில் தாம் எவ்வித ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என குறிப்பிட்டார்.
கட்சிக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் நீண்ட கதைகளும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்ட போதிலும், அடிப்படையற்ற அக்குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
