Our Feeds


Friday, June 12, 2026

Zameera

6,000 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது


 அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கழிவுத் தேயிலையை சந்தேக நபர் ஒருவர் லொறியொன்றினூடாக கொண்டு சென்றபோது சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் (11) இரவு கைதுசெய்துள்ளனர்.

அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து குளியாபிட்டியாவிற்கு ஹட்டன் வழியாக கழிவுத் தேயிலையை ஏற்றிச் செல்லும்போதே ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வைத்து ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் லொறியினை நிறுத்தி மேற்கொண்ட சோதனையின் போது உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கழிவு தேயிலையை ஏற்றிச் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்து மேற்கொண்ட விசாரணையின் பின்னர் கழிவு தேயிலை கடத்துவதற்கு பயன்படுத்திய லொறி ஆகியவற்றை இன்று (12) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

(செ.திவாகரன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »