Our Feeds


Wednesday, June 10, 2026

Zameera

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது


 ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த சங்கத்திற்கும், பிரதி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் விசாரணை நடத்தி தீர்மானமொன்றை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்ப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, இன்று(10) பயணிகள் ரயில் சேவைகள் வழமை போல் இயங்கும் எனவும், பயணிகள் எவ்வித தடையுமின்றி பயணிக்க முடியும் எனவும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இருப்பினும், சரக்கு போக்குவரத்து ரயில் ஊழியர்கள் மாத்திரம் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »