கொழும்பு களுபோவில தெற்கு போதனா வைத்தியசாலையில் , சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டுதலின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட மேம்பட்ட நோயாளி பராமரிப்புப் பிரிவுகள் நாளை (30) பொதுப் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளன.
இதில் குறிப்பாகஇதய வடிகுழாய் ஆய்வகம்
டிஜிட்டல் சப்ராக்ஷன் ஆஞ்சியோகிராபி யூனிட் லித்தோட்ரிப்ஸி யூனிட் (சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை கற்களை உடைக்கப் பயன்படும் வசதி) என்பன அடங்குகின்றன.
அத்துடன்,இந்த வாரம் அரசு வைத்தியசாலை அமைப்பில் மொத்தம் 4 நவீன லேப்கள் சேர்க்கப்படுவதோடு. இந்த புதிய அமைப்புகள் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான நிகழ்நேரப் படமெடுக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.
அத்துடன்,இவை கதிர்வீச்சு வெளிப்பாட்டைக் குறைத்து, உயர்தரப் படங்களை வழங்குகின்றன.
இந்த மேம்பட்ட வசதிகள் மூலம் நோயாளிகளுக்கான காத்திருப்போர் பட்டியல் குறைவதோடு, வேகமான, துல்லியமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சிகிச்சையை நோயாளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
