அம்பாந்தோட்டை நகரை அண்டிய பகுதிகளில் கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08) அப்பகுதிகளுக்கு கள விஜயங்களை மேற்கொண்டுள்ளார்.
பரம்பரை பரம்பரையாக கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் இந்த மீனவர்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 3 இறங்குதுறைகள் அமைந்து காணப்பட்டாலும், அவை ஒரு இறங்கு துறையாக மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் காரணமாக இறங்குதுறைகளை நீக்குவதற்கு இந்த மீனவர்களும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
காலாகாலமாக ஒரு நாள் படகு மற்றும் பல நாள் படகு மீன்படித் தொழில் ஈடுபட்டு வந்தோரே இவ்வாறு இந்த வாக்குறுதிகளை நம்பி தமது கரை வலை மீன்பிடி அனுமதிப் பத்திரங்களை இழந்துள்ளனர். இதன் காரணமாக இவர்களினது சட்டப்பூர்வமான கரை வலை மீன்பிடி அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவர்கள் 22 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம்.
சிறிய படகுகள் மற்றும் ஏனைய மீன்பிடி தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 750 மீட்டர் தூரத்திற்கு அப்பால் கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான புதிய அனுமதிப் பத்திரங்களை இந்த மீனவர்கள் தற்சமயம் எதிர்பார்க்கின்றோம்.
தற்போதுள்ள மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் அனுமதிப் பத்திரம் இல்லாமல் இந்த கரை வலை மீன்பிடி தொழிலை முன்னெடுப்பதற்கு அனுமதிக்காமல் இருக்கின்றனர். இந்த பிரச்சினை நீதிமன்றம் வரை நீண்டுள்ளன என்று இப்பிரதேச மீனவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் முன் தெரிவித்தனர்.
இப்பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய சஜித் பிரேமதாச, இப்பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு தேவையான தலையீடுகளை மேற்கொள்வேன் என்று வாக்குறுதியளித்துள்ளார்.
