Our Feeds


Friday, June 26, 2026

Zameera

சூரிய மின்கட்டமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரிக்கை


 மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையை பேணுவதற்காக, நாளை (27) முதல் 29ஆம் திகதி வரை கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் மேற்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்புகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (26) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அமைப்புகளை நிறுத்தி வைப்பதன் மூலம் கடந்த வெசாக் தினத்தில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைத் தவிர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை மின்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »