பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால்
மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டு வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பு மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பொறுப்பிலிருந்த வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பு என்பன இன்று (27) அழிக்கப்பட்டன.
நீர்கொழும்பு பிரதான நீதவான் திலினி பெரேரா முன்னிலையில், புத்தளம் வனாத்தவில்லு, லெக்டொவத்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தகன உலையில் வைத்து இவை அழிக்கப்பட்டன.
இந்த போதைப்பொருள் கையிருப்பு நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலிருந்து அந்த உலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே இப்போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டன.
அழிக்கப்பட்ட போதைப்பொருள் கையிருப்பில் பின்வருவன உள்ளடங்குகின்றன:
ஐஸ்: 13 கிலோ 22 கிராம்
கொக்கெய்ன்: 2 கிலோ 30 கிராம்
குஷ் (Kush): 39 கிலோ 710 கிராம்
ஹெரோயின்: 156 கிராம்
கஞ்சா மற்றும் ஹஷிஷ்: 04 கிலோ 136 கிராம்
மெண்டி (Mandi): 1 கிலோ 200 கிராம்
போதை மாத்திரைகள்: 26,262 மாத்திரைகள்
