தெற்கு ஜப்பானின் குமாமோட்டோ பகுதியில் இன்று (28) பதிவான 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவிதமான ஆபத்துமில்லை என்று புவியியல் சர்வே மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் டைம்ஸ் (Japan Times) செய்தி நிறுவனத்தின்படி, செவ்வாய்க்கிழமையன்று கியூஷு பிராந்தியத்தில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில் 7.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ஜப்பானிய நில அதிர்வு தீவிர அளவுகோலில் நிலையான 'ஷிண்டோ 7' (shindo 7) என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரியாக்கே மற்றும் யட்சுஷிரோ கடல் பகுதிகளின் கரையோரப் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்ததுடன்.
பொதுமக்கள் கடற்கரைக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் முதலாவது சுனாமி அலை வந்தடைந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மேலும் பல அலைகள் விரைவில் வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.யட்சுஷிரோ (Yatsushiro), உடோ (Uto) நகரங்கள் மற்றும் மஷிகி (Mashiki), மிசடோ (Misato) நகரங்கள் மற்றும் குமாமோட்டோ நகரின் மினமி வார்டு (Minami Ward) ஆகிய பகுதிகளில் ஷிண்டோ அளவில் 6 என்ற பலத்த அதிர்வு உணரப்பட்டது.
மேலும், குமாமோட்டோவின் பிற நகரங்கள் மற்றும் அயல் மாகாணங்களான நாகசாகி, ககோஷிமா, புகுவோகா, சாகா மற்றும் மியாசாகி ஆகிய இடங்களிலும் ஜப்பானிய அளவுகோலின்படி 5 அல்லது அதற்கு மேற்பட்ட பலத்த அதிர்வுகள் உணரப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தின் மையம், குமாமோட்டோ நகருக்குத் தெற்கே உள்ள உகி (Uki) நகரில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.
Tuesday, July 28, 2026
ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
