Our Feeds


Tuesday, July 21, 2026

SHAHNI RAMEES

குவைத்திற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!


 மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக,

குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. 


இதன்படி, நேற்று (20) முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. 


இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1979 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது +94 11 777 1979 அல்லது +94 74 444 1979 ஆகிய வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியோ பெற்றுக்கொள்ள முடியும். 


அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »