Our Feeds


Friday, July 24, 2026

ShortNews

நான் பதவி விலகமாட்டேன் - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!


தாம் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் கோரவில்லை எனவும், ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களும் பிணையில் உள்ளவர்களுமே பதவி விலகுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“என்னை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் குறிப்பிடவில்லை. ஊழல்வாதிகளும், பிணையில் உள்ளவர்களுமே நான் பதவி விலக வேண்டும் எனக் கூறுகின்றனர். நான் பதவி விலகப் போவதில்லை. அதற்கான எந்தவொரு அவசியமும் கிடையாது” என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான பொறுப்புகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், அரசாங்கத்தின் மக்கள் ஆணைக்கு அமைவாக தனது கடமைகளை நிறைவேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »