Our Feeds


Friday, July 31, 2026

SHAHNI RAMEES

லிந்துலையில் குளவி கொட்டுக்கு உள்ளாகி ஒருவர் பலி - ஐவர் வைத்தியசாலையில்....

 


லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாமஸ்டன்

தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்தார். 


இன்று காலை 10.00 மணிளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


சம்பவத்தில் 61 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 


எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏனையவர்களில் பலத்த காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »