Our Feeds


Thursday, July 30, 2026

ShortNews

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழிவை உடனடியாக மீளப் பெறவும் - இலங்கைத் திருச்சபை கோரிக்கை!


மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு இலங்கைத் திருச்சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக இலங்கைத் திருச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைத் திருச்சபையின் (அங்கலிக்கன் திருச்சபை) கொழும்பு ஆயர் துஷாந்த ரொட்ரிகோ மற்றும் குருணாகல் ஆயரும் தலைமை ஆயருமான நிஷாந்த பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »