Our Feeds


Tuesday, August 18, 2026

Zameera

உலக பல்கலைக்கழக தரவரிசையில் பேராதனை பல்கலைக்கழகம் முன்னிலை

(நமது நிருபர்)


உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைக்கான மைய வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் பேராதனை பல்கலைக்கழகம் முன்னிலை பெற்றுள்ளது.Travel Guides & Travelogues


உலக பல்கலைக்கழக தரவரிசையில் கல்வி பெறுபேறுகள், பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன், கல்வி ஊழியர்களின் தரம் மற்றும் ஆராய்ச்சி செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு குறிகாட்டிகள் கருத்தில் கொள்ளப்பட்டு உலகளவிய ரீதியில் 21,291 பல்கலைக்கழகங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில், உலகளாவிய ரீதியில் பேராதனைப் பல்கலைக்கழகம் 1,695ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த சாதனை, பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் சர்வதேச மட்டத்திலான செயற்திறனை வெளிப்படுத்தும் முக்கியமான மதிப்பீடாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »