Our Feeds


Monday, August 24, 2026

Zameera

ஊழல்வாதிகள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி - சரத் பொன்சேகா


 (இராஜதுரை ஹஷான்)


நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம், ஒற்றையாட்சிக்கு பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கிறார்கள். இவர்களின் போலியான வேடத்துக்கு மக்கள் மீண்டும் ஏமாற்றமடை கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். அரசாங்கம் சிறந்த முறையில் தான் செயற்படுகிறது. ஊழல் மோசடிகள் இல்லாமல் சட்டத்தின் பிரகாரம் அரச அதிகாரிகள் செயற்படுகிறார்கள். இதனால் ஊழல்வாதிகள் அனைவரும் இன்று அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


இரத்தினபுரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


2022  ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி சிறந்ததே. அந்த நெருக்கடியினால் தான் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் நாட்டை 


கடந்த காலங்களில் ஊழல்மிக்க அரசியல் கட்டமைப்பை காணப்பட்டது.அரசியல்வாதிகள் பெருந்தொகையான அரச நிதியை கொள்ளையடித்து விட்டு அதில் மிகவும் குறைந்த நிதியையே மக்களுக்கு வழங்கினார்கள். தேசப்பற்றாளர்களைப் போன்று பேசினார்கள்.


புதிய அரசியல் கலாசாரம் தோற்றம் பெற்றாலும் மக்கள் இன்றும் அந்த ஊழல்மிக்க பழைய அரசியல் கலாசாரத்தை நாடும் தன்மை காணப்படுகிறது. அரசியல் அலைக்கு அமைய வாக்களிக்கும் கலாசாரத்தில் இருந்து மக்கள் முதலில் மாற வேண்டும். மக்கள் அரசியல் அலைக்கு பின்னால் செல்லும் போது ஊழல்வாதிகளும், படுகொலையாளிகளும் தான் பாராளுமன்றத்துக்கு செல்வார்கள். கடந்த காலங்களில் அவ்வாறான நிலையே காணப்பட்டது.


2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் தெரிவு செய்த சிறந்த அரசியல் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். நாட்டில் தற்போது எதிர்க்கட்சித் தலைமைத்துக்கு வெற்றிடம் காணப்படுகிறது. கடந்த காலங்களில் சிதறி கிடந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் சிறைச்சாலை செல்வதை தடுப்பதற்கான தற்போது ஒன்றிணைந்துள்ளனர்.இவர்கள் நாட்டுக்காக ஒன்றும் ஒன்றிணையவில்லை என்பதை மக்கள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.


கடந்த கால ஆட்சியாளர்கள் கடன் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதாக குறிப்பிட்டார்கள்.ஆனால் அந்த அபிவிருத்திகளால் மக்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை. கடன் பெற்று தமது குடும்பத்தை வளப்படுத்தினார்கள். வெளிநாடுகளில் சொத்து சேகரித்தார்கள்.ஆனால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. இதன் தாக்கம் நடுத்தர மக்கள் மீது முழுமையாக சுமத்தப்பட்டது.அதன் தாக்கமே இன்றளவில் தொடர்கிறது.


பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்காகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பெறப்பட்டது. தற்போதைய அரசாங்கமும் விரும்பியோ, விரும்பாமலோ நாணய நிதியத்தின் செயற்திட்டங்களை அமுல்படுத்த வேண்டிய  நிலை காணப்படுகிறது.நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள் மீண்டும் தேசியம், பௌத்தம், ஒற்றையாட்சிக்கு பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு அதிகாரத்தை கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கிறார்கள். இவர்களின் போலியான வேடத்துக்கு மக்கள் மீண்டும் ஏமாற்றமடை கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.


அரசாங்கம் சிறந்த முறையில் தான் செயற்படுகிறது. ஊழல் மோசடிகள் இல்லாமல் சட்டத்தின் பிரகாரம் அரச அதிகாரிகள் செயற்படுகிறார்கள்.இதனால் ஊழல்வாதிகள் அனைவரும் இன்று அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள். அரசாங்கத்துடன் நான் ஒன்றிணைய போவதில்லை. அரசியலில் ஒரு மாற்று சக்தியாக செயற்படுவேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »