Our Feeds


Sunday, August 2, 2026

Zameera

மஹர சிறை மோதலுக்கு அதிக நெரிசலே காரணம்


 மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமைக்கு அங்குள்ள அதிக நெரிசலே காரணம் என கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்தார். 


சிறைச்சாலை அதிகாரிகள் அங்குள்ள உண்மை நிலைமையை மறைக்க முயற்சித்து வருவதாக அதன் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா சுட்டிக்காட்டினார். 


இச்சிறைச்சாலையில் 991 சந்தேகநபர்களை மட்டுமே தடுத்து வைக்க முடியும் என்ற போதிலும், தற்போது 4,447 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 


மேலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்குத் தேவையான வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் சேனக பெரேரா குறிப்பிட்டார். 


மஹர சிறைச்சாலையில் நேற்று (01) பிற்பகல் 01.00 மணியளவில் மோதல் நிலைமையொன்று ஏற்பட்டதாகவும், அதனைக் கட்டுப்படுத்தாமல் சிறைச்சாலை அதிகாரிகள் வளாகத்தை விட்டு வெளியேறி கைதிகளுக்கிடையில் மோதல் தீவிரமடைய இடமளித்துள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »