இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த திமுத்து சதுரங்க (28) எனப்படும் ‘சமித்புர சது ’ ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
மட்டக்குளியை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த சந்தேகநபர், ஓமானில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
