Our Feeds


Monday, August 17, 2026

Zameera

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது


 அஹுங்கல்ல, கல்போக்க ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


அவரிடமிருந்து 204 கிராம் 660 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இந்தச் சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »