Our Feeds


Wednesday, September 23, 2026

Zameera

பெருங்கடலில் மெக்சிகோ கடற்கரைக்கு அருகில் உருவான 'போலோ' சூறாவளி 5ஆம் நிலையாக வலுவடைந்தது

 


பசிபிக் பெருங்கடலில் மெக்சிகோ கடற்கரைக்கு அருகில் உருவான 'போலோ' சூறாவளிப் புயல், மிக அதிவேகமாக வலுவடைந்து 5 ஆம் நிலைச் சூறாவளியாக மாறியுள்ளது.News


அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் விசேட ஆய்வு விமானம் புயலின் மையப்பகுதியை ஆய்வு செய்ததில், மணிக்கு 285 கிலோ மீற்றர் (180 mph) வேகத்தில் பேரழிவு சூறாவளிக் காற்று வீசுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.   


எல் நினோ காலநிலை நிகழ்வு காரணமாகப் பசிபிக் பெருங்கடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட சுமார் 3°C வரை அதிகரித்து காணப்படுகிறது. இதனால், வெறும் 24 மணி நேரத்திற்குள் 110 mph வரை காற்றின் வேகம் அதிகரித்து, 'போலோ' வரலாற்றுச் சாதனை அளவிலான பேரழிவுப் புயலாக உருவெடுத்துள்ளது.


மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தெரிவிக்கையில்,



புயல் நேரடியாக மெக்சிகோ நிலப்பரப்பில் கரையைத் தொடாது; மாறாகக் கடற்கரையை ஒட்டி வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


நிலப்பரப்பில் நேரடியாக மோதாவிட்டாலும், ஹலிஸ்கோ, கொலிமா, மிகோகன்  மற்றும் கெர்ரேரோ ஆகிய தென்மேற்கு மாகாணங்களில் 15 முதல் 30 சென்றி மீற்றர் வரை கடும்மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபத்தான நிலச்சரிவுகளும் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்படக்கூடும்.


கடல் அலைகள் பல மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் உள்ளூர் மக்களுக்கு உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »