(நமது நிருபர்)
லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விலைக்குறைப்பானது சனிக்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வர்த்தக உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சின் வழிகாட்டலின் படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலைக் குறைப்புச் செயற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விலைக் குறைப்பின் கீழ் பெரிய வெங்காயம் கிலோவொன்று 309 ரூபாவாகவும் வெள்ளைச் சீனி (மொத்த விற்பனை) கிலோவொன்று 245 ரூபாவாகவும் சிவப்பு பருப்பு கிலோவொன்று 242 ரூபாவாகவும் கோதுமை மா கிலோவொன்று 174 ரூபாவாகவும் சிவப்பு அரிசி கிலோவொன்று 173ரூபாவாகவும் வெள்ளையரிசி கிலோவொன்று 174 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்தப் பொருட்களின் அதிகப் பட்ச சில்லறை விலைகள் 1 முதல் 10 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் அதிகப்பட்சமாக 1 கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது