போக்குவரத்து தவறுகள் தொடர்பாக சாரதிகளின் புள்ளிகளைக் குறைக்கும் முறைமையின் 6 மாத முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சில் இன்று (28) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் ஆண்டின் மார்ச் 31 ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
நாட்டின் வீதிகளில் நிகழும் வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், போக்குவரத்து அமைச்சினால் சாரதிகளுக்கான இந்தப் புள்ளிக் குறைப்பு முறைமை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருட காலப் பகுதிக்கு சாரதிகளுக்கு குறிப்பிட்ட அளவிலான புள்ளிகள் வழங்கப்பட்டு, அவர்கள் வீதிகளில் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஏற்ப அந்தப் புள்ளிகளைக் குறைப்பதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
Monday, September 28, 2026
போக்குவரத்து தவறுகளுக்காக புள்ளிகளைக் குறைக்கும் திட்டம் - ஒக்டோபரில் ஆரம்பம்!
Latest
Previous
Next Post »
Next Post »
