சிவராசா அனோஜனின் விடுதலைக்காக அமைதியான முறையிலும் அறவழியிலும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இலங்கை இந்து அமைப்புகளின் கூட்டமைப்பினால் விசேட அமைதிப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 6:00 மணிக்கு இரத்தினபுரி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் நடைபெற்றது.
மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அனைத்து மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
பெருந்திரளான பொதுமக்கள் ஒன்றிணைந்து, எவ்வித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் விளக்கேற்றித் தமது ஆதரவையும் அக்கறையையும் தெரிவித்தனர்.
ஒரு மனிதனுக்கான நியாயமான தீர்வை வேண்டி அமைதி, மனிதநேயம் மற்றும் அறவழியின் அடிப்படையில் மக்கள் ஒன்றிணைந்ததை இந்நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது.
சகோதரன் அனோஜனுக்கு நியாயம் கிடைக்கும் வரை அறவழியில் தமது குரல் தொடரும் என இலங்கை இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.