கைது செய்வதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பிரதிவாதியான விமல் வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி மஞ்சுள பத்திராஜ நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரரின் வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அவரால் குறித்த நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாகத் தெரிவித்தார்.
அதற்கமைய, அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையைத் திரும்பப் பெறுமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
எவ்வாறாயினும், இந்த கோரிக்கையை நாளை (22) சீராய்வு மனுவொன்றின் (Motion) ஊடாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம அறிவித்தார்.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயித் அல்-ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில், கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் விமல் வீரவன்ச சந்தேநபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வழக்கே இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
Monday, September 21, 2026
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
