இந்த நாட்களில் நடத்தும் எதிர்ப்புகள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு தேவையில்லை எனவும் தற்போது வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பே போதுமானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
நாட்டில் சில அரசியல் தரப்பினர் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த நாட்களில் நடத்தும் போராட்டங்களுக்கு அதிக அளவில் பாதுகாப்பு வழங்கப்படுவதாக என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடத்தப்படும் போராட்டங்களின் போது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீச வேண்டிய அவசியமில்லை என்று பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வாகனப் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் செயல்பாடுமாறும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸ் தலைமையகம் ஊடக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏதேனும் அவசரத் தேவை அல்லது அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் பொலிஸாரால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Thursday, September 24, 2026
போராட்டங்களுக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு தேவையில்லை - அமைச்சர் ஆனந்த விஜயபால!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
