Our Feeds


Wednesday, September 30, 2026

SHAHNI RAMEES

வக்பு சபையின் அமர்வினை அறிக்கையிட விடியல் இணையத்தள ஆசிரியர் றிப்தி அலிக்கு அனுமதி மறுப்பு!

 


வக்பு சபையின் அமர்வினை அறிக்கையிட விடியல் 

இணையத்தள ஆசிரியருக்கு அனுமதி மறுப்பு


வக்பு சபையின் இன்று (30) புதன்கிழமை அமர்வினை அறிக்கையிட விடியல் இணையத்தள ஆசிரியரான சிரேஷ்ட ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 


தற்போதைய வக்பு சபைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 


இந்த நிலையில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபிற்கும் வக்பு சபையின் உறுப்பினர்களும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று பிரதி அமைச்சர் முனீர் முழப்பரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. 


இந்த சந்திப்பினைத் தொடர்ந்து கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பான விசாரணையினை வக்பு சபை முன்னெடுந்திருந்தது. 


இந்த விசாரணையினை அறிக்கையிடுவதற்காகச் சென்ற விடியல் இணையத்தள ஆசிரியரான சிரேஷ்ட ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 


கடந்த காலங்களில் வக்பு சபை மற்றும் வக்பு நியாய சபை ஆகியவற்றின் அமர்வுகளை விடியல் இணையத்தள ஆசிரியர் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் அறிக்கையிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 


இவ்வாறான நிலையிலேயே வக்பு சபையின் இன்றைய அமர்வினை அறிக்கையிட அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


இதேவேளை, தற்போதைய வக்பு சபைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முஸ்லிம் சமூகத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றமை முக்கிய விடயமாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »