Our Feeds


Wednesday, September 23, 2026

ShortNews

அனோஜனைக் காப்பாற்ற ஜம்மியத்துல் உலமா சபையுடன் இந்து குருமார்கள் சந்திப்பு!


சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனோஜன் என்ற தமிழ் இளைஞருக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுத்து, அவரை மரண தண்டனையிலிருந்து பாதுகாப்பதற்குத் தலையிடுமாறு கோரி, இலங்கையின் முதன்மை இந்து குருமார்கள் மற்றும் மதத் தலைவர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமை அலுவலகத்தில் இன்று (23) அவசர பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டனர்.

இச்சந்திப்பின்போது, உடனடியாக இறுதி முடிவொன்றை எட்டுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் காணப்பட்டபோதிலும், அனோஜன் என்ற இளைஞரின் உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அனைத்துச் சாத்தியமான வழிகளினூடாகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுதியளித்துள்ளது.

மனிதநேய அடிப்படையில் இடம்பெற்ற இந்த முக்கிய பேச்சுவார்த்தையில், இலங்கை கம்பன் கழகத் தலைவர் இ. ஜெயராஜ், அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவி அபிராமி கைலாசப்பிள்ளை, சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் ராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா, இந்து குருமார் அமைப்பின் தலைவர் வைதீஸ்வரக் குருக்கள், சைவ மகாசபையின் பிரதிநிதிகளான ரிஷி செந்தில்நாத் மற்றும் ரவீந்திரன் குருசாமி, ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலயப் பிரதம குருக்கள் விஜயானந்தன் குருசாமி, பொரள்ளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயப் பிரதம குரு வினாயகன் சர்மா, பிராமண இந்து குருக்கள் சங்கத் தலைவர் மகேஸ்வரக் குருக்கள் மற்றும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சுரேன் சந்திரன் உட்படப் பல இந்து அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகளும் ஒருங்கிணைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »