Our Feeds


Monday, September 28, 2026

Zameera

மக்களின் நிதியில் தேவையற்ற விழாக்கள் வேண்டாம்

 

மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் சலுகைகளுக்காக தேவையின்றி விழாக்களை நடத்துவது அவசியமற்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


கேகாலை, கல்கமுவ தொகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



2024/2025 ஆம் ஆண்டிற்கான மஹாபொல புலமைப்பரிசில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வை அலரிமாளிகையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், அலரிமாளிகைக்கு வருகை தந்து பதிவு செய்தால் மட்டுமே சான்றிதழும், அதன் பின்னரே புலமைப்பரிசிலும் வழங்கப்படும் என மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.



எனினும், இந்தப் பிரச்சினை வெளிவந்ததையடுத்து குறித்த நிகழ்வை அரசாங்கம் இரத்துச் செய்துள்ளதாகக் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை,பழைய நடைமுறைகளை விமர்சித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கமும் அதே முறையைப் பின்பற்றிப் பல்கலைக்கழக மாணவர்களை அசௌகரியத்திற்குள்ளாக்குவதாக அவர் குற்றம்சாட்டினார்.



மேலும், ஒரு நபர் ஒரு நாளைக்கு வாழ்வதற்கு 589 ரூபாய் போதுமானது எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என்றும், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »