வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மன்னார், முல்லைத்தீவு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலின்படி, குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Sunday, September 27, 2026
பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
