Our Feeds


Wednesday, September 30, 2026

SHAHNI RAMEES

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதித்த வழக்கு: ஞானசார தேரருக்கு இன்றும் பிடியாணை!

 


இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்து கருத்து

வெளியிட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து, பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாகக் கைது செய்யக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) புதன்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.


இந்த வழக்கு இன்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை.


இஸ்லாமிய மார்க்கத்தையும் முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளையும் அவமதிக்கும் வகையில் வெளிப்படையாகக் கருத்துக்களைத் தெரிவித்தமை தொடர்பாகவே ஞானசார தேரருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகாதமையினால், அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »