சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக்
குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிஜே தெரிவித்துள்ளார்.
Yaris, Raize, Vezel, Wagon R, Daihatsu Mira மற்றும் Suzuki Every Van போன்ற அதிக தேவைகொண்ட வாகனங்களின் விலைகள் 3 இலட்சம், 4 இலட்சம் மற்றும் சில வாகனங்களின் விலைகள் 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளன.
சந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு முன்னர் வாகனமொன்றைக் கொள்முதல் செய்வதற்கு நுகர்வோருக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
