Our Feeds


Tuesday, September 29, 2026

Zameera

ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித்த ஹேரத் சந்திப்பு

 


நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட வாரத்திற்கு மத்தியில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி செய்யித் அப்பாஸ் அராக்ச்சியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


இந்தச் சந்திப்பின்போது, இரு அமைச்சர்களும் தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரங்கள் தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.


பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் ஊடாக பிராந்திய தகராறுகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதுடன், பதற்றத்தைத் தணிப்பதற்கான தனது அழைப்பை இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


மேலும், பிராந்தியத்தில் நிலவும் மோதல்களைத் தீர்ப்பதற்கும் பதற்றத்தைக் குறைப்பதற்குமான இராஜதந்திர முயற்சிகளுக்கு இலங்கையின் ஆதரவை அமைச்சர் விஜித்த ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.



பிராந்திய ஸ்திரத்தன்மையை விரைவில் மீள ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »