Our Feeds


Thursday, September 24, 2026

ShortNews

PHOTOS: திறமையை வெளிக்காட்டிய Rise Up Academy மாணவிக்கு உம்ரா செல்வதற்கான டிக்கெட் அன்பளிப்பு.



பெண்கள் இஸ்லாத்தை தூய வடிவில் கற்றுக்கொள்வ தற்காகவும், சுய முன்னேற்றமும் பெற வேண்டும் என்பதற்காகவும் நடத்தப்படும் ஈறுலக பாடத்திட்டங்களில் (Ramazan Tharbiya, Thajweedh, Henna Aari  course, sewing) முதல் இடத்தை பிடித்த சகோதரிக்கு புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான டிக்கட் Rise Up Academy மூலமாக அன்பளிப்பு செய்யப்பட்டது. Alhamdulillah 

பெண்களுக்கான இஸ்லாமிய போதனைகளுடன் வாழ்வாதார வழிகாட்டலையும் இலவசமாக வழங்கிவரும் Rise Up Academy யின் 4வது Award Ceremony கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் - BMICH - 19.09.2026 அன்று நடைபெற்ற போது பிரபல உம்ரா சேவை நிறுவனமான WORLD RICH TRAVALS (PVT) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

ஒவ்வொரு ஆண்டும் Rise Up Academy யில் கல்வி கற்கும் மாணவிகளுக்கான Award Ceremony தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நிலையில் இம்முறையும் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவிகள் தமது கல்வித் தகமைகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் Award களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்கள். 

புனிதமிக்க ரமழான் மாதத்தில் Rise Up Academy நடத்திவரும் கேள்வி பதில் நிகழ்வில் பங்கேற்ற மாணவிகளில் முதல் இடம் பெற்றுக்கொண்டவருக்கு 25 ஆயிரம் ரூபா பணப் பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பிரபல மருத்துவர் ஷாபி ஷிஹாப்தீன், கொழும்பு, வலயக்கல்வி அலுவலக இஸ்லாம் பாட வளவாளர் காமில் மவ்லானா, இப்னு உஸைமீன் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் நஜ்முல் ஹூஸைன் அப்பாஸி, Rise Up Academy அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் அக்ரம் பயானி, திடீர் மரண விசாரணை அதிகாரியும், சிங்கள மொழி மூல இஸ்லாமிய பிரச்சாரகருமான அஷ்ஷெய்க் சஜீர் உஸ்வி, உம்ரா சேவை நிறுவனமான WORLD RICH TRAVELS (PVT) உரிமையாளர் Brother லுக்மான், மருத்துவர் இமாரா ஷாபி மற்றும் சகோதரர் ரஸ்மின் MISc ஆகியோர் கலந்து கொண்டனர். 

கொழும்பில், பெண்களுக்காக, பெண் ஆசிரியர் களினால் நடத்தப்பட்டு வரும் Rise Up Academy கடந்த 4 ஆண்டுகளுக்குள்ளாக பாரிய வளர்ச்சியை பெற்றுள்ளதுடன், பெண் கல்வி மற்றும் பெண்களுக்கான வாழ்வாத உதவிகள் வழங்குதல் மற்றும் பெண் பிள்ளைகளை ஒழுக்கமாக வார்த்தெடுக்கும் வகையிலான பல்தரப்பட்ட பயிற்றி வகுப்புகளையும், பாடங்களையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.





 

 






 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »