Our Feeds


Thursday, November 12, 2026

ShortNews

அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு 117 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு!

2027ஆம் ஆண்டில் இலங்கையின் பல்வேறு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக 117,300 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்துள்ளார்.


2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக 53,450 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழிந்துள்ளார். இதன் நிர்மாணப் பணிகளை 2028 செப்டெம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர – ரம்புக்கனை வரையான பகுதிக்காக 4,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப் பணிகளை 2027 மே மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், ரம்புக்கனை – கலகெதர வரையான பகுதியின் அபிவிருத்திப் பணிகளுக்காக 2,350 மில்லியன் ரூபாவை ஒதுக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தை 2029 ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், குருநாகல் – தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்டப் பணிகளுக்காக 30,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குருநாகல் – கலேவெல வரையான பகுதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.


அதேவேளை, ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 27,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டம் கஹதுடுவ முதல் இங்கிரிய வரையான பகுதியை உள்ளடக்கியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »