Our Feeds


Thursday, November 5, 2026

Zameera

2027ஆம் ஆண்டில் மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 50 பேருந்துகள் இணைப்பு

 

'மெட்ரோ பேருந்து' சேவையில் மேலும் 50 புதிய பேருந்துகளை எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் இணைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார்.


எதிர்காலத்தில் மேல் மாகாணத்துக்கு அப்பால் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய முக்கிய நகரங்களுக்கும் இப்பேருந்து சேவையை விரிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஆரம்பத்தில் இரண்டு வழிகளில் 10 பேருந்துகளுடன் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்ட இச்சேவை, தற்போது மேல் மாகாணத்தின் 3 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 7 வழிகளில் 122 பேருந்துகளுடன் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.


'LMT Go' கைத்தொலைபேசிச் செயலி மற்றும் ஒட்டுமொத்த பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவது தொடர்பில் நவம்பர் 4ஆம் திகதி பிரதி அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இந்த விரிவாக்கத் திட்டங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »