நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 82 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையாகும் என அப்பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 29 என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பெய்த மழையால் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
