Our Feeds


Saturday, November 7, 2026

Zameera

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நாடு திரும்பினார்!

 

அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற 28வது பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டில் (CHOGM 2026) பங்கேற்றதன் பின்னர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (07) நாட்டிற்கு திரும்பினார்.




தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, அவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




இந்த மாநாட்டின் போது, ​​பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து, உலகளாவிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து பிரதமர் கலந்துரையாடினார். இதன்போது, ​​பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்காக உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் கூட்டாண்மையையும் பலப்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தினார்.




மேலும், பல பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்திய பிரதமர், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »